சாலையில் குடிநீர் குழாய் உடைந்ததால் போக்குவரத்து மாற்றம்

83பார்த்தது
கோவை கே ஜி மருத்துவமனை நீதிமன்ற வளாகம் இணைகின்ற சாலையில் குடிநீர் குழாய் உடைந்ததால் போக்குவரத்து மாற்றம்.

கோவை நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், மின் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கே ஜி மருத்துவமனை நீதிமன்ற வளாகம் இரண்டும் இணைகின்ற ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு பகுதியில் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் குடிநீர் குழாய் உடைந்து சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து குழாயை சரி பண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை செல்லக்கூடிய குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கமிஷனர் அலுவலகம் முன்பு சீர் செய்யும் பணியில் மாநகராட்சி இறங்கினர் அந்த பாதாள சாக்கடை குழாய் சீர் செய்யும் பணியில் தற்போது அடைப்பு ஏற்பட்டு குடிநீர் செல்லக்கூடிய குழாயும் உடைந்துள்ளது.

மாநகராட்சி மாநகராட்சி அதிகாரிகள் தற்போது குடிநீர் குழாய் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு இன்னும் வராத காரணத்தினால் ரோட்டை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி