ராடுமேன் எனப்படும் திருடனை கைது செய்த கோவை மாநகர தனிப்படை போலிசார்.
கோவை மாநகரில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலும் வழிகாட்டுதலின் பேரிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் கொள்ளை சம்பவங்களில் மூளையாக செயல்பட்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராடுமேன்(எ) மூர்த்தி என்பவரை தனி படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை வடக்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் ஸ்டாலின்,
கைது செய்யப்பட்டுள்ள ராடுமேன்(எ) மூர்த்தி என்பவர் மீது கோவையில் மட்டும் 18 கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் 68 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்தார். இவரது குழுவில் ஏழு பேர் உள்ளனர் என தெரிவித்த அவர் தற்பொழுது மூர்த்தி மற்றும் ஹம்சராஜ் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக கூறினார்.