கோவை டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, தொழில் வரி, சொத்து வரி, காலி இட வரி, புதிய குடிநீர் இணைப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் வழங்கி வருகின்றனர்.
பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். இந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் முன்னிலையில் பொதுமக்கள் மனுக்களை அளித்து வருகின்றனர்.