கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் யோகேஷ்(35). பிஇ பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுகன்யா(35). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில், யோகேஷ் போதிய வருமானம் இல்லாமல் குடும்ப நடத்த சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை நினைத்து அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த யோகேஷ் நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.