பொதுமக்களின் மனதை திருடிய இசைப்பிரியர் டாபிரின்.
By Saran 955பார்த்ததுகடற்கொள்ளையர்களின் கதையை கருவாகக் கொண்ட படத்தின்
இசையை இசைத்து -
தன் இசையின் மூலம் பொதுமக்களின் மனதை திருடிய இசைப்பிரியர் டாபிரின்.
கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டாபிரின் பல்வேறு இசைக்கச்சேரியில் வயலின் இசை அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் கணபதி பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி வீடு ஒன்றில்
*("Pirates of the Caribbean")* கடற்கொள்ளையர்களின் கதை கருவாகக் கொண்ட
ஆங்கில படத்தின் பின் இசையை *("bgm")* இசைத்து மணமகளை வாழ்த்தினார்.
இந்த இசை அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தற்போது அவர் இசைத்த இசை அங்கிருந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.