சூலூர்: தனியார் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு!

55பார்த்தது
சூலூர்: தனியார் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு!
சூலூர் அருகே செங்கந்துறையைச் சேர்ந்த ருத்ரமூர்த்தி (வயது 51) என்பவர் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கான மருத்துவ செலவுத் தொகை ரூ. 1, 70, 816-ஐ பெற காப்பீட்டு நிறுவனத்தை அணுகினார்.
முன்னரே ரத்த அழுத்த நோய் இருந்ததாகக் கூறி காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க மறுத்தது. இதையடுத்து கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் ருத்ரமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் விசாரணை நடத்தி, காப்பீட்டு நிறுவனம் ருத்ரமூர்த்திக்கு ரூ. 1, 70, 816 மருத்துவ செலவுத் தொகையை வழங்க வேண்டும் எனவும், மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ. 15, 000 மற்றும் நீதிமன்ற செலவாக ரூ. 5, 000 வழங்க வேண்டும் எனவும் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி