விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை சென்னையிலேயே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்டம் ரயில்வே தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 3. 45 மணிக்கு புறப்படும் சென்னை கோவை சிறப்பு ரயில் 06151 அன்று இரவு 11. 45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.
அதேபோல கோவையில் இருந்து செப்டம்பர் எட்டாம் தேதி இரவு 11. 30 மணிக்கு புறப்படும் கோவை சென்னை சிறப்பு ரயில் 06152 மறுநாள் காலை 7. 35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும் என்று தெரிவித்துள்ளது.