கோவா அருகே உள்ள மட்கான் வேளாங்கண்ணி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், மட்கான் ரயில் நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் 12: 30 மணிக்கு புறப்படும் மட்கான் வேளாங்கண்ணி ரயில் 01007 மறுநாள் நண்பகல் 12 25 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறு மார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து சனிக்கிழமை செப் 7 இரவு 11: 55 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி மக்கான் சிறப்பு ரயில் 01008 மறுநாள் இரவு 11 மணிக்கு மட்கான் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.