கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். இதில் 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்தலாம்.
கிழக்கு மண்டலத்தில் குருசாமி நகர், காந்தி நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் ரவி முருகன் அபார்ட்மெண்ட், பெருமாள் கோவில் வீதி, மருதகோனார் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, தேவாங்க நகர், ஓணாப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் முகாம்கள் நடைபெறும். வடக்கு மண்டலத்தில் மணியகாரம்பாளையம், காமதேனு நகர் ஆகிய இடங்களிலும், தெற்கு மண்டலத்தில் கோனவாய்க்கால்பாளையம், ஹவுசிங் யூனிட் பேஸ்-1, சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளிலும், மத்திய மண்டலத்தில் நாராயணசாமி லே-அவுட், எம். என். ஜி. வீதி, 80 அடி சாலை, கெம்பட்டி காலனி ஆகிய இடங்களிலும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலத்தில் செலுத்துமாறு ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.