கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்காநல்லூரைச் சேர்ந்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 25) நேற்று நள்ளிரவில் தனது நண்பருடன் உப்பிலிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (54), சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் (27), அரவிந்தன் (31) ஆகியோர் சந்தோஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டு இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரன், ஜெகதீசன், அரவிந்தன் ஆகியோரை கைது செய்தனர்.