தொடங்கியாச்சு ஸ்கூல்... மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!

81பார்த்தது
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவையில் பல்வேறு பள்ளிகளிலும், மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின் நண்பர்களை சந்திக்கப்போகும் குஷியின் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர்.

திருச்சி சாலை புனித பிரான்சிஸ் பள்ளியில் மாணவிகள் வரவேற்க சக மாணவிகள் பூக்கள் போல உடை அணிந்து, இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மேளதாளம் வாசித்தும், பாடல் பாடியும் மாணவர்களை வரவேற்றனர். இத்தகைய சிவப்பு கம்பள வரவேற்பால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி