கோவை சுக்கிரவார்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் நிறுவன செல்போன் கோபுரம் இருந்தது. இந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்தி விட்டதால் கோபுரம் பயன்பாடின்றி கிடந்தது. இதற்கிடையே இந்த நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுர உதிரி பாகங்கள் அடிக்கடி திருட்டு போவதாக நிறுவன அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன்பேரில், சுக்கிரவார்பேட்டையில் உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த செல்போன் கோபுரத்தை சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ரூ. 2 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரி அர்ஜூனன் என்பவர் ஆர். எஸ். புரம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.