கோவை ஆர். எஸ். புரம் பூ மார்க்கெட்டுக்கு சத்தி, மேட்டுப்பாளையம், காரமடை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாள்களாக முகூர்த்த நாள்கள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்து, அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மல்லிகை கிலோ ரூ. 1,000, அரளி ரூ. 120, முல்லை ரூ. 480.