கோவை உக்கடம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெரைட்டிஹால் ரோடு, டவுன்ஹால், தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனிசாமி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பாங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பிற பகுதிகள் ஆகியவற்றில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் துரைசாமி அறிவித்துள்ளார்.