பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு கவியருவி அருகே சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஒற்றை காட்டு யானை ஆழியாறு நவமலை மற்றும் வால்பாறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி கேட்கப்படும் காணப்படுகிறது. முன்னதாக மாலை நேரங்களில் மட்டுமே காணப்பட்ட இந்த யானை, தற்போது பகல் நேரங்களிலும் ஆழியாறு கவியருவி அருகே நடமாடுவதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் மலைவாழ் குடியிருப்பு மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்றும் இந்த யானை கவியருவி பகுதியில் தென்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒற்றை யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.