கோவை முழுவதும் போலீசார் சோதனை

11092பார்த்தது
கோவை மாநகரம் முழுவதும் நேற்று காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

கோவை மாநகரம் முழுவதும் முக்கிய சாலை சந்திப்புகளில் வரும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் அவ்வாறு வரும் வாகனங்களில் முறையான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில் வழக்கம் போல இது ஒரு பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் சோதனை நிகழ்ச்சியாகும் அதன் அடிப்படையில் தான் மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் படி அங்கு வரும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஆவணங்கள் குறித்தும் பயணிகள் குறித்தும் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இது வழக்கமான பாதுகாப்பு ஒத்திகை குறித்த சோதனையாகும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி