பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சின்னமத்தம்பாளையத்தைச் சேர்ந்த காளிச்சாமி (வயது 42), மில் காவலாளி. நேற்று மதியம் 2 மணி அளவில் தனது மகள் கீர்த்திகாவை (11) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்த காளிச்சாமி சிகிச்சைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். கீர்த்திகா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.