பீளமேடு: தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு

54பார்த்தது
பீளமேடு: தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கோவை, பீளமேடு பகுதியில் வசிக்கும் 27 வயதான தொழிலதிபர் அஸ்வின் வீட்டில் இருந்து நகை மற்றும் ரூ. 40,000 ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. நேற்றுமுன்தினம் (டிச.27) இவர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ரொக்கம் மற்றும் நகை திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அஸ்வின் நேற்று பீளமேடு போலீசில் புகார் கொடுத்தார். பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி