கோவை: பொது இடத்தில் போதையில் இடையூறு செய்தவர் கைது

56பார்த்தது
கோவை: பொது இடத்தில் போதையில் இடையூறு செய்தவர் கைது
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி.என்.மில்ஸ் ஸ்ரீரங்கா மெஜஸ்டிக் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 35). இவர் கூடலூர் கவுண்டம்பாளையம் அம்மன் நகரில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு அங்குள்ள மக்களுக்கு இடையூறு செய்துள்ளார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நேற்று ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி