தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

71பார்த்தது
தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு
கோவை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலம் முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது தமிழக அரசையும் மின்சார வாரியத்தையும் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மாநகரத் தலைவர் மதுசூதனன் கூறியதாவது,
"மின்சார வாரியத்தின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் கடுமையான வேலைப்பளுவுடனும் மன உளைச்சலுடனும் கீழ் மட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலால் தொடர் விபத்துகளும் மரணங்களும் ஏற்பட்டு வருகிறது. பலமுறை எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியும் இந்த அரசு செவி மடுக்காத காரணத்தால் தான் தமிழக முழுவதும் அலுவலகத்திற்குள்ளேயே காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த போராட்டத்திற்கு செவி சாய்த்து அரசு தீர்வு காணவில்லை என்றால் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கி இந்த அமைப்பு செல்லும். " என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி