கோவை: மொபைல் கவர், செல்போன் திருட்டு

56பார்த்தது
கோவை: மொபைல் கவர், செல்போன் திருட்டு
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள செல்போன் கடையில் மொபைல் கவர் மற்றும் ஹெட்போன் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சிங்காநல்லூரில் உள்ள செல்போன் கடையில் மொபைல் போன்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று (அக்.29) இரவு சுமார் 9 மணி அளவில் கடைக்கு வந்த ஒரு மர்ம நபர், மொபைல் கவர் பார்ப்பது போல நடித்து, ஒரு மொபைல் கவரை திருடியுள்ளார். அதன் பிறகு, அவர் கடை ஊழியர்களிடம் ஹெட்போன் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஊழியர்கள் கவனிக்காத நேரத்தில், ஒரு ஹெட்போனையும் திருடிச் சென்றுள்ளார். இந்த திருட்டு சம்பவம் முழுவதும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இன்று(அக்.30) அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி