மேட்டுப்பாளையம்: சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்

69பார்த்தது
மேட்டுப்பாளையம்: சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என். மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே மேம்பாலத்தில் திடீரென குளம் உருவாகி, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் இன்று (டிசம்பர் 22) நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

2017-ல் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் அருகே பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாய்கள் செல்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்த குழாய் உடைந்து, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதனால் சாலை குண்டும் குழியுமாக மாறி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையை எதிர்த்து, அதிமுக 14வது வட்டக் கழக செயலாளர் பிரகாஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, மேம்பாலம் அருகே தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த வழியாக அரசு அதிகாரிகள் செல்கின்றனர். ஆனால் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. ஏதாவது உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி