நீதிமன்ற முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
மத்திய அரசின்
மூன்று பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக் கோரி
தமிழக வழக்குரைஞர்கள் டெல்லி ஜந்தார் மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக டெல்லி வழக்குரைஞர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவும், 3 சட்டங்களையும் திரும்ப பெற கோரி
கோயம்புத்தூர் நீதிமன்றம் முன்பு இன்று வழகறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழகறிஞர்கள் 3 சட்டங்களையும் திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி