கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த விஜய் (வயது 29) மற்றும் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டி (வயது 43) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இருவரிடமிருந்தும் 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்படும் சோதனைகளில் ஈடுபட்டுள்ள போலீசார், சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.