கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர் நேற்று (டிச.28) கரட்டுமேட்டிலிருந்து கீரநத்தம் செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இருவரை பிடித்து விசாரிக்கும் போது அவர்களிடம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலைப் பொருட்களைக் கொண்டு வந்த ராஜஸ்தானை சேர்ந்த அஜாபாராம் (29), மற்றும் ஆரிப் கான் (52) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, 200. 111 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன.