வனத்துறை யானைகளை விரட்டுவதில் முறையாக செயல்படுவதில்லை.
பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிதி உதவியும் வழங்குவதில்லை.
தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு டார்ச் லைட் கொடுக்க வேண்டும். வனப்பகுதி அருகில் அகழி, மின்வேலி போன்றவை அமைக்க வேண்டும். அதை முறையாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு
இழப்பீடு அதிகமாக கொடுக்க வேண்டும்.
நேற்று ஒருவர் இறந்த நிலையில் வனத்துறை அங்கேயே இருந்திருந்தால் இன்று காலை மக்கள் காயம் அடைந்து இருக்க மாட்டார்கள். அந்த பகுதியில் பொதுமக்களை தொடர்ந்து தாக்கி வரும் சம்மந்தபட்ட யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
காட்டுயானைகளை விரட்டுவதில் கோவை
வனத்துறை உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதில்லை. யானைகளை விரட்ட உரிய நடவடிக்கைகள் எடுப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.