தமிழ்நாடு முதலமைச்சரால், கடந்த (13. 03. 2024) அன்று கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பேருந்து நிலையம் நவீன முறையில் மறு சீரமைக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் உக்கடம் பேருந்து நிலையத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.