கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (26. 07. 2024) விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார். விவசாயிகள் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுவை கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் அளித்தனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் அழகுராஜ், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் வெங்கடாசலம், கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன் ஆகியோர் இருந்தனர்.