ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேவிட் ஜேம்ஸ் (42). இவர் கோவையைச் சேர்ந்த அன்புச்செல்வன் மூலம் சங்கனூர் பகுதியில் இடம் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அதற்குரிய ஆவணங்களை அன்புச்செல்வன் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
இது குறித்து இவர் விசாரிக்கும் பொழுது அன்புச்செல்வன், இடத்தின் ஆவணங்களை பிரின்ஸ் சுந்தர் என்பவரிடம் கொடுத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து டேவிட் ஜேம்ஸ் கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் அன்பு செல்வன் மற்றும் பிரின்ஸ் சுந்தர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.