கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக கடைவீதி போலீசாருக்கு நேற்று, தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கிருந்த 3 பேர் கும்பலை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே சோதனை செய்த போது 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோவை ஆர். ஜி. தெரு சித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த 31 வயதான
சூர்யா, தெற்கு உக்கடம் பிலால் எஸ்டேட்டை சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி 22 வயதான முகமத் நிஷார், சுக்கிரவார் பேட்டை உப்பாரா தெருவை சேர்ந்த நகைப்பட்டறை தொழிலாளி 26 வயதான பாலகிருஷ்ணன், ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1. 350 கி. கிராம் கஞ்சா, ஒரு பைக் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.