காந்திபுரம்: நகை வியாபாரியிடம் ரூ. 51 லட்சத்தை பறிதவர் கைது!

68பார்த்தது
காந்திபுரம்: நகை வியாபாரியிடம் ரூ. 51 லட்சத்தை பறிதவர் கைது!
கோவை, வைசியாள் வீதியைச் சேர்ந்த அக்ஷய் (28) என்ற நகை வியாபாரி, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நகை வாங்குவதற்காக ரூ. 51 லட்சத்துடன் சேலம் செல்லும் வழியில், அவிநாசி சாலை மேம்பாலம் அருகே இருவரால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டு, பணம் பறிக்கப்பட்டது.

விசாரணையில், பணம் பறிப்பில் ஈடுபட்டவர்கள் அக்ஷயுடன் பணியாற்றிய கிருஷ்ணா படேல் (35) மற்றும் அவரது நண்பர் விக்ரம் ஜம்பா யாதவ் (28) என்பது தெரிய வந்தது. இருவரும் தலைமறைவானதால், மாநகர காவல் ஆணையர் வே. பாலகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று (அக்.,4) விக்ரம் ஜம்பா யாதவ் கோவைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் அவரை ஒரு வீட்டில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அக்டோபர் 5-ஆம் தேதி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளியான கிருஷ்ணா படேலை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி