கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நீட்டிப்பு கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது), மற்றும் வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றிற்கு பொருந்தும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்பதால், ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு 0422 - 2642041, 88254- 34331, 80727 - 37402 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.