விஸ்வ பாரத் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று புதன்கிழமை காலை 11மணிக்கு ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனத்திற்குகொண்டு செல்லும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய பொதுச்செயலாளர் ஸ்ரீ பாபுஜி சாமிகள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
தமிழக முழுவதும் உள்ள விஸ்வ பாரத் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.