பாஜக நிர்வாகியிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

3632பார்த்தது
கோவை குண்டு வெடிப்பு தினமான பிப்ரவரி 14ஆம் தேதி, சமூக வலைதளங்களில் 1998 ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாகவும் "கோவை மன்னிக்காது" என்ற ஹாஸ்டேக் வுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜக மாநில தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுகுறித்த விசாரணைக்காக கடந்த 19ஆம் தேதி செல்வகுமாருக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று செல்வகுமார் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

தொடர்புடைய செய்தி