அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்திலிருந்து நான் பின்வாங்க போவதில்லை, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை, செல்வப் பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும் அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அண்ணாமலையின் பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாமலை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கவுன்சிலர் ஏ எஸ் ஷங்கர் தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி