பாஜகவை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

456பார்த்தது
ராகுல் காந்தியை பத்து தலை ராவணன் போல் சித்தரித்து அவதூராக விமர்சனம் செய்ததாக கூறி பாஜக மற்றும் மோடியை கண்டித்து, கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோவை காந்திபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் பாஜக அலுவலகம் உள்ள பகுதியில் 200 மீட்டர் தொலைவிற்கு முன்பாகவே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் முற்றுகை போராட்ட அறிவிப்பை அறிந்த பாஜகவினர் அலுவலகம் முன்பாக திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி