மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு
மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய போது பாஜகவினருக்கும் காங்கிரஸருக்கும் நாடாளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக எம். பி அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை குறி வைத்து எவருக்கு தன் சாதி என்ன என்று தெரியாதோ அவர் கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார் என்று கூறினார்.

பாஜக எம்பி அனுராக் தாகூர் பேசியது தற்பொழுது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.

அதனை கண்டித்து இந்தியா தேசிய காங்கிரஸ் கோவை மாநகர் சார்பாக மத்திய அரசு கண்டித்தும் பாஜக எம்பி அனுராதா ஒரு கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நாடாளுமன்ற மரபை மீறி பாஜக எம்பி பேசி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக ஜாதிவாதி கணக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி