கோவை சீரநாயக்கன்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் முரளி (வயது 39). கூலி தொழிலாளியான இவருக்கு நாகஷில்பா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முரளி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
மேலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமலும், வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முரளி நேற்று மது வாங்க மனைவி மற்றும் உறவினர்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் விரக்தி அடைந்த முரளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர். எஸ். புரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.