கோவை: கடன் பிரச்சனையால் பெண் தற்கொலை

74பார்த்தது
கோவை: கடன் பிரச்சனையால் பெண் தற்கொலை
கோவை, பீளமேடு ரயில் நிலையம் பின்புறம் வி. கே. ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 40) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்துவிட்டதால் மகன், மகளுடன் வசித்து வந்த இவர், அருகில் உள்ள கவர்மெண்ட் கம்பெனிக்கு வேலைக்குச் சென்று வீட்டுச் சுமை காரணமாக கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் அதிக கடன் பிரச்சனை காரணமாக மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று இதுகுறித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி