கழகத் தலைவர் தளபதி விஜயின் உத்தரவின்படி பொதுச்செயலாளர் அறிவுறுத்தலின்படியும் கோடைகால வெப்பத்தை தணிக்க தமிழக வெற்றி கழகம் சார்பாக பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு புறநகர் மாவட்டம் சூலூர் வடக்கு ஒன்றியம் கருமத்தம்பட்டி நகர தலைமை சார்பாக 12 இடங்களில் நீர்மோர் பந்தல் அமைத்து தர்பூசணி வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட கழகச் செயலாளர் எஸ் பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் கழக நிர்வாகிகள் த. விமல் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆர் கணேசன், ஜில்லா பாலு, மோகன்ராஜ் நகர நிர்வாகிகள் சக்தி சுந்தரம், மகேந்திரன், அஜித், ஆர் ஆர் சண்முகம், ரஞ்சிதா, அவிலாகிரேசி, சரண்யா, மாரிசெல்வம், கமலக்கண்ணன், சந்தோஷ், ஆட்டோ மோகன், மணிரத்தினம், விஜய் சந்துரு மற்றும் பேரூர் ஊராட்சி நிர்வாகிகள் மோகன், நடராஜ், ராகுல், விஜய்கார்த்திக், மஸ்தான், கார்த்திக், பூபதி பாலமுருகன், சுப்ரமணி, ஆனந்த் ஜெயா, அழகுமலை மற்றும் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்ட விழாவை சிறப்பித்தார்கள். பயன்பெற்ற பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழகம் கழக நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டனர் என்று பாராட்டினர்கள்.