கோவையில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் திரையரங்கில், நடிகர் விக்ரம் மற்றும் வீர தீர சூரன் படக்குழுவினர் நேற்று ரசிகர்களுடன் கலந்துரையாடினர். திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், ரசிகர்களின் கொண்டாட்டத்தை நேரில் காண வந்ததாக விக்ரம் தெரிவித்தார்.
ரசிகர்களிடம் படத்தில் பிடித்த காட்சிகள் குறித்து கேட்டபோது, அனைத்து காட்சிகளும் பிடித்திருப்பதாக அவர்கள் ஆரவாரம் செய்தனர். படத்தின் அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட விக்ரம், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கண்ணுபடப் போகுதய்யா பாடலை பாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விக்ரம், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வீர தீர சூரன் திரைப்படம் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ள ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.