கோவை: வைகாசி விசாகம்- பூக்கள் விலை உயர்வு!

51பார்த்தது
கோவையில் இன்று கோவில்களில் வைகாசி விசாகம் நடைபெறுகிறது. இதனால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை கிலோ ரூ. 1, 000 வரை விற்பனையாகிறது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு காலை, மாலை என இரண்டு நேரங்களில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வைகாசி மாதத்தில் விழாக்கள் அதிகம் இருப்பதால் பூக்களுக்கு பொதுவாகவே அதிக டிமாண்டுகள் இருக்கும். இப்போது வைகாசி விஷாகம் மற்றும் தொடர் முகூர்த்த நாட்கள் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. முக்கியமாக, முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதும் விற்பனையை உயர்த்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி