கோவை: மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் வைகாசி விசாகம்

56பார்த்தது
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்ததுடன், பால் காவடிகள் மூலம் முருகர், வள்ளி, தெய்வானைக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் உற்சவர் சுப்பிரமணியசாமி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி