கோவை மாநகரில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இடையர்பாளையத்தைச் சேர்ந்த ஹக்கீம் (51) மற்றும் தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த தனஞ்செயன் (35) ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இடையர்பாளையம் கருவேப்பிலை தோட்டத்தில் கஞ்சா விற்ற ஹக்கீமை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல், தெலுங்குபாளையம், வேடப்பட்டி சாலையில் கஞ்சா விற்பனை செய்த தனஞ்செயனை செல்வபுரம் போலீசார் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோவை மாநகர தெற்கு சரக உதவி ஆணையர் அஜய் தங்கம் பரிந்துரையின் பேரில், கோவை மத்திய சிறையில் உள்ள ஹக்கீம் மற்றும் தனஞ்செயனுக்கு குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு நகல் வழங்கப்பட்டது.