கோவை: Thug Life வெளியீடு- ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

65பார்த்தது
மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிம்பு, திரிஷா நடித்த Thug Life திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இதனை கொண்டாடும் வகையில் கோவையில் உள்ள பூ மார்க்கெட் அருகே உள்ள திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத்தலைவர் தங்கவேலு நிகழ்வில் கலந்து கொண்டு கேக் வெட்டி திருவிழா சூழலை ஏற்படுத்தினார். மேலும், மாற்றுத்திறனாளி ஜெயபிரபாவின் மகள் ஷாலினிக்கு 10, 000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி