கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும்போது, தமிழகம் ஒரு பாதுகாப்பான மாநிலம். அதிலும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் உள்ளது. சமீபகாலமாக மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்கள், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. குறிப்பிட்ட அந்த பல்கலை கழகத்தில் நடந்த இந்த சம்பவம் கண்டிக்கதக்கது. மாநில அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை, கைது செய்யப்பட்ட நபர் தி. மு. க வை சேர்ந்தவர். அதுவும் குறிப்பாக துணை முதல்வரை சந்தித்து புகைபடம் எடுக்கும் அளவுக்கு உள்ளவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக புகார் சொன்னது வரவேற்தக்கது. பெண்கள் பாதுகாப்பில் தி. மு. க அரசு கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.