கோவை: இடியுடன் கோடை மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி!

65பார்த்தது
கோவை மாநகரில் இன்றும் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. நீலாம்பூர், இருகூர், மலுமிச்சம்பட்டி, பீளமேடு, ரேஸ்கோர்ஸ், உக்கடம், சிங்காநல்லூர், கணபதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. சாலைகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தபடி சென்றன. மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளாக இன்றும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் இது குறித்து இன்று கூறுகையில், கோவை உட்பட கொங்கு மண்டலத்தில் நாளை (வியாழக்கிழமை) இரவு வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை மழையால் வெப்பம் குறையும் என்றார் என்று கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி