கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் நேற்று முன்தினம் இரு கோஷ்டிகளுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோதலில் காயம் அடைந்த இரண்டு மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.