கோவை கணபதிபுதூர் மூன்றாவது வீதி முதல் கிராசில் எழுந்தருளி அருள் பாலிக்கும் கணபதிபுதூர் கருணைத்தாய் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் இன்று சித்திரை திருநாள் முன்னிட்டு அம்மன் பக்தர்களுக்கு சர்ப்ப அலங்காரத்தில் அருள் ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.