கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய விழா மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, விதைச்சான்று துறை அலுவலர்கள், வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.